தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வேற லெவல்.. தல அஜித்தை தொடர்ந்து கெத்து காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்! வாயடைக்க வைத்த புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து அவர் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது அவரது கைவசம்
பொன் மாணிக்கவேல், பார்ட்டி உள்ளிட்ட படங்கள் உள்ளன. நிவேதா பெத்துராஜ் சிறுவயதிலிருந்தே கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில் அவர் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் முதல் நிலையை முடித்து இருக்கிறார். மேலும் அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் தல அஜித்தை தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிவேதா பெத்துராஜ்க்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.