கொரோனாவால் உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீரா உடலை பார்த்து கதறிய மனைவி, 2 மகள்கள்.! கண்களை குளமாக்கும் புகைப்படம்.!

கொரோனாவால் உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீரா உடலை பார்த்து கதறிய மனைவி, 2 மகள்கள்.! கண்களை குளமாக்கும் புகைப்படம்.!


nithish-veera-family-crying-after-seeing-his-body

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து நாளுக்கு நாள் பல உயிர்களை பறித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

nithish veera

நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதிஷ் வீராவின் உடலை அவரது குடும்பத்தினர், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது மகள்களும் மனைவியும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.