சினிமா வீடியோ

அட! அறந்தாங்கி நிஷா அக்காவா இது! திருமணத்தின்போது எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

Summary:

அறந்தாங்கி நிஷா மற்றும் ரியாஸ் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி தனது கலகலப்பான பேச்சாலும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குணத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.   நிஷாவின் கணவர் ரியாஸ். இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அழகிய ஜோடியான இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நிஷா  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு தனது கலகலப்பான பேச்சால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் பெருமளவில் கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

இதற்கிடையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு நிஷா மற்றும் ரியாஸ் திருமண நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நிஷா அக்காவா இது?  என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 


Advertisement