அடேங்கப்பா.. முடி எங்க?? அடையாளமே தெரியாம வேற லெவலில் மாறிய நிரூப்! இந்தப் புகைப்படத்தை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. முடி எங்க?? அடையாளமே தெரியாம வேற லெவலில் மாறிய நிரூப்! இந்தப் புகைப்படத்தை பார்த்தீங்களா!!


Niroop photo after haircut photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.

அதாவது ராஜு, அமீர், நிரூப், பிரியங்கா, பாவனி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக, ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இறுதி வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு ஹேர் கட் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்தே நீளமான முடியுடன் இருந்த நிரூப் தற்போது ஹேர் கட் செய்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதனை விஜய் தொலைக்காட்சியே சமூக வலைத்தள பக்கத்தில், என்னவொரு மாற்றம் என ஷேர் செய்துள்ளது. அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.