குளியல் சீனில் நடிக்கணுமா?? அப்போ அதுதான் வேணும்.! ஷூட்டிங்கில் ஷாக் கொடுத்த நடிகை நிலா!!

குளியல் சீனில் நடிக்கணுமா?? அப்போ அதுதான் வேணும்.! ஷூட்டிங்கில் ஷாக் கொடுத்த நடிகை நிலா!!



nila askes 12000 liter water to act in bathing scene

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கி, அவரே ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் அன்பே ஆருயிரே. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிலா. தொடர்ந்து அவர் ஜாம்பவான், லீ, மருதமலை, ஜகன்மோகினி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளுமளவிற்கு  பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஜாம்பவான் படத்தில் நடித்தபோது அவர் குளியல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக 12000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்சினை செய்ததாக படத்தின் இயக்குனர் நந்தகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஜாம்பவான் படத்தின் ஒரு காட்சி குற்றாலத்தில் எடுக்கப்பட்டது. அங்கு 12000 கொள்ளளவு கொண்ட தொட்டி ஒன்றில் நிலாவும், அவரது தோழிகளும் குளிப்பது போல காட்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நடிகை நிலா நான் இந்த தண்ணீரில் குளிக்கமாட்டேன்.  அப்படி குளிக்க வேண்டுமென்றால் தொட்டி முழுதும் மினரல் வாட்டரை நிரப்புங்கள் என  கூறியுள்ளார். அதற்கு தயாரிப்பு குழு மறுத்தநிலையில் அவர் ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். பிறகு பல பிரச்சினைகள் வந்து அவரிடம் சமாதானம் பேசி இறுதியாக அந்தக் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.