சத்தமே இல்லாமல், ரகசியமாக பிரபல நடிகருடன் நிச்சயதார்த்ததை முடித்த நடிகை நிக்கி கல்ராணி! வெளிவந்த தகவல்!!

சத்தமே இல்லாமல், ரகசியமாக பிரபல நடிகருடன் நிச்சயதார்த்ததை முடித்த நடிகை நிக்கி கல்ராணி! வெளிவந்த தகவல்!!


nikki-kalrani-encagement-finished-with-actor-aadhi

தமிழில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் பிரபல நடிகரான ஆதியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆதி தமிழ் சினிமாவில் ஈரம் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.

nikki kalrani

 மேலும் அவர் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடிகை நிக்கி கல்ராணியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவருக்கும் விரைவில் திருமணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.