பிரபல வாரிசு நடிகருக்கு ஜோடியாக.. சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறாரா நடிகை ரோஜா மகள்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

பிரபல வாரிசு நடிகருக்கு ஜோடியாக.. சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறாரா நடிகை ரோஜா மகள்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!


news-viral-roja-daughter-going-to-act-vith-vikram-son-d

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “செம்பருத்தி” படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் சினிமாவில் இருந்து விலகிய அவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தற்போது அவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக உள்ளார். நடிகை ரோஜா கடந்த 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

thruv vikram

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.  அதாவது நடிகர் விக்ரமின் மகன் துருவ் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அதில் ஹீரோயினாக, துருவ்வுக்கு ஜோடியாக நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.