அடேங்கப்பா.. இத்தனை கோடியா?? தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் விஷால்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா?? பரவும் தகவல்!!

அடேங்கப்பா.. இத்தனை கோடியா?? தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் விஷால்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா?? பரவும் தகவல்!!


News viral about salary for vishal to act as villain in thalapathy 67

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். குடும்ப, எமோஷனலான படமான இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாம். இதனைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கிறாராம்.

இதற்கு முன்பு ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தளபதி 67 படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாகவும், இதில் விஜய் 50 வயது தாதா ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள்  நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

vishal

அதன்படி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் விஷால் முதன்முதலாக வில்லனாக நடிக்கவிருப்பதால் 20 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை