வரும் புத்தாண்டுக்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம்!

வரும் புத்தாண்டுக்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம்!


New year film in sun tv

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இல்லாத காலம், 100 நாட்கள் ஓடினால்தான் படம் வெற்றி என கூறிய காலம், புதிதாக வந்த திரைப்படத்தை எப்போது தொலைக்காட்சியில் போடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த காலம். இதெல்லாம் மாறி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே தொலைபேசியில் பார்க்கும் அளவிற்கு தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துவிட்டது.

ஆனால், முன்பெல்லாம் புது படத்தை எப்போது சன் டீவியில் போடுவார்கள்? இந்த தீபாவளிக்கு சன் டீவியில் என்ன படம்? பொங்கலுக்கு சன் டீவியில் என்ன படம் என மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். இப்போதெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான படங்களை ஒளிபரப்பினால் கூட பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை.

Sun tv

இந்நிலையில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடிப்பில் KV ஆனந்த் இயக்கத்தில் தயாரான  காப்பான் திரைப்படத்தை வரும் புத்தாண்டுக்கு சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. வரும் புதன் கிழமை மாலை 6 .30 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.