புதிய டாஸ்க்கால் ரணகளமான பிக்பாஸ் வீடு.! பயங்கர வலியுடன் போராடும் போட்டியாளர்கள்!! வீடியோ இதோ..

புதிய டாஸ்க்கால் ரணகளமான பிக்பாஸ் வீடு.! பயங்கர வலியுடன் போராடும் போட்டியாளர்கள்!! வீடியோ இதோ..



new-task-in-bigboss-house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

bigboss

இந்நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படும் டிக்கெட் பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் முழு மூச்சுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய கடினமான போட்டியில் சாண்டி, தர்ஷன், சேரன் ஆகியோர்  விளையாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் மிகவும் கஷ்டபட்டு வலியுடன் முகேன், கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் போராடி வருகின்றனர். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.