வெளியாகி வைரலாகும் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் அடுத்த லுக் போஸ்டர்.!

வெளியாகி வைரலாகும் ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் அடுத்த லுக் போஸ்டர்.!


new tamil movie - komali - vairal next look poster

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து  பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு காமெடியாக உருவாக்கப்படும் இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது அதில் தனது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ஜெயம் ரவியை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மீண்டும் இப்படத்தின் அடுத்த லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.