சினிமா வீடியோ

நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பு! புதிய பிரமாண்ட ஷோவில் அதிரடியாக களமிறங்கும் தொகுப்பாளினி டிடி! வீடியோ இதோ!

Summary:

New show starts in vijay tv

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறுவயது முதல் ஏராளமான மேடை நிகழ்ச்சியை செய்து வருகிறார். மேலும் இவர் சின்னத்திரை தொடர்களில் மட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி,ஜோடி நிகழ்ச்சிகள் மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து அவர் சின்னத்திரை பிரபலங்களை வைத்து எங்கிட்ட மோதாதே என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கி வந்தார். 

அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் தற்போது புதிதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள speed என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் இதுகுறித்த பிரமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement