சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரமாண்ட தொடர் முடிகிறது! புது சீரியல் என்ன தெரியுமா?
தமிழகம் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.
பொதுவாக இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சன் தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ரேவதி, நதியா, பானு என பல பிரபலங்கள் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் குடும்ப சீரியல்களையும் தாண்டி நாகினி, நந்தினி போன்ற பாம்பு, மந்திரம் போன்ற சீரியல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது அருந்ததி என்ற புது சீரியல் வெளியாகவுள்ளது. பேய், பூதம், மாயம், மந்திரத்தை அடிப்படையாக கொண்டதாக இந்த தொடர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் எனும் பிரமாண்ட தொடர் இந்தவாரம் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. 13.05.2019 திங்கள் கிழமையிலிருந்து இரவு 10 மணிக்கு அருந்ததி என்ற புது சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான புரோமோவையும் ஒளிபரப்பி வருகின்றனர். புத்தம்புதிய பிரமாண்ட தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.