தமிழகம் சினிமா

இன்று முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகும் புதிய மெகா தொடர்!! ஆவலுடன் ரசிகர்கள்!!

Summary:

new serial in sun tv


இந்திய அளவில் சன் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்துவந்த சீரியல் தற்போது இனளஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

சன் டிவியில் பிரபல சினிமா நடிகைகள் நடிக்கும் பிரமாண்ட தொடர்களும் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் நம்பர் ஒன் சேனலாகவும் செயல்பட்டு வருகிறது சன்டிவி நிறுவனம்.

இந்தநிலையில் சன்டிவியில் இன்று(மார்ச் 18) முதல் புத்தம்புதிய நிலா எனும் மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. "நிலா" தொடர் இன்று முதல் மதியம் 2:30 மணிக்கு வாரம்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்குமுன் மதியம் 2:30 மணிக்கு கல்யாணபரிசு எனும் மெகா தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இன்றுமுதல் கல்யாணபரிசு தொடர் மாலை 3:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொடர் நிலாவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Advertisement