பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து முதன்முறையாக பதிவிட்டுள்ள ஆர்யன்.! என்ன கூறியுள்ளார் பாருங்க..

பாக்கியலட்சுமி சீரியலில் வெளியேறியது குறித்து முதன்முறையாக பதிவிட்டுள்ள ஆர்யன்...! அவர் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...


new-seliyan-chartr-in-baakiyalaxmi-seriyal

குடும்ப தலைவியின் கதையை  மையமாக கொண்டு விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்றாகவும் ஓடி கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி.

அதில் தற்போது பாக்கியாவின் கணவர் கோபி பாக்கியாவிற்கு தெரியாமல்  விவாகரத்து செய்யும் செயல்  வீட்டில் உள்ள அனைவருக்கும் எப்போது தெரியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் திடீரென சீரியலிருந்து வெளியேறிய  நிலையில் தற்போது  விகாஷ் சம்பத் என்பவர் புதிய செழியனாக நடிக்க தொடங்கியுள்ளார்.

Baakiyalaxmi

சீரியலில் இருந்து வெளியேறிய ஆர்யன், தான் ஏன் சீரியலில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்து எந்த  பதிலும்  கூறாதநிலையில்,  தற்போது முதன்முறையாக சீரியல் குறித்து ஒரு பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் "எனக்கு இதுநாள் வரை செழியன் வேடத்திற்கு கொடுத்த அன்புக்கு நன்றி, அதேபோல் புதிய செழியனாக வந்திருக்கும் விகாஷ் அவர்களுக்கும் கொடுங்கள் நன்றி" என பதிவு செய்துள்ளார்.

Baakiyalaxmi