தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான 4 மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுத்த புதுப்பெண்.! தாய் செய்த அதிர்ச்சி காரியம்!!

Summary:

new married pride got baby after 4months from marriage

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வந்தவர் சப்னாமோல். இவருக்கு கேரளாவில் வசித்து வந்த முஜிப்ரகுமான் என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணமான புதுமண தம்பதிகள் பாலக்காட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் திருமணமான நான்காவது மாதத்திலேயே சப்னாவிற்கு பெண்குழந்தை பிறந்தது. இதனால்  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர் அதுமட்டுமின்றி கணவருக்கும் சப்னா மீது  சந்தேகம் எழுந்தது. மேலும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையும் இருந்து வந்துள்ளது.

marriage க்கான பட முடிவு

இந்நிலையில் மனமுடைந்த சப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரிஇல்லை எனவும், அவர் பேச்சு மூச்சின்றி இருப்பதாகவும் சப்னா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

baby leg க்கான பட முடிவு

ஆனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் போலீசார்கள் சப்னாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

பின்னர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,  நான்கு மாதங்களிலேயே குழந்தை பிறந்ததால் எனது கணவருக்கு என் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் எங்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்துப் போய் போர்வையால் குழந்தையின் முகத்தில் அழுத்தி கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement