சினிமா

காதலர் தின ஸ்பெஷல் அதுவுமா இப்படியா?? இதுவரை போடாத புதிய கெட்டப்பில் கோமாளிகள்!! ஆள் அடையாளமே தெரியலையே!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பலரும் இதன் ஒரு எபிசோட்டை கூட தவறாமல் பார்த்து வருகின்றனர்.குக் வித் கோமாளி 1 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களாக நடிகை ஷகிலா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தீபா, கனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி,மணிமேகலை, சுனிதா, டிக்டாக்  சரத் ஆகியோர் உள்ளனர். இவர்கள் செய்யும் சேட்டைகள், ரகளைகளை ரசிப்பதற்கெனவே பெரும் கூட்டமே உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் காதலர் தின வாரமாக குக் வித் கோமாளி ஒளிபரப்பாக உள்ளது. இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் கோமாளிகள் அனைவரும் குழந்தைகளின் பேவரைட் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், டோரா, சோட்டா பீம், ஷிஞ்சான் என மாறியுள்ளனர். இதனால் இந்த வாரம் காமெடிகளுக்கு குறைவில்லாமல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement