இது கைதி ஹிந்தி டப்பிங்கா?.. அஜய் தேவனின் போலா பட டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. நொந்துபோன ரசிகர்கள்.!

இது கைதி ஹிந்தி டப்பிங்கா?.. அஜய் தேவனின் போலா பட டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. நொந்துபோன ரசிகர்கள்.!


Netizens Troll Ajay Devkan Bholaa Tamil Remake Kaithi Hindi


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக்கின் அட்டகாசமான நடிப்பில் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து வெளியானது. 

படத்தில் பல சஸ்பென்சுகள் நிறைந்து காணப்பட்டு, திரையில் அடுத்தடுத்த காட்சிகளை மும்மரமாக நகர்த்தியதால் ரசிகர்களின் பேராதரவுடன் படம் அமோக வெற்றி அடைந்தது. 

Ajay Devgan

இந்த படம் உலகளவில் ஹிட்டடித்ததை பார்த்து ஹிந்தியில் அஜய் தேவ்கன் படத்தை டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்தார். அதற்கு முன்னதாக கைதி படம் ரஷியவில் மொழியாக்கம் மட்டும் செய்யப்பட்டு மாஸ் ஹிட் கொடுத்தது. 

இந்த நிலையில், அஜய் தேவ்கன் நடிப்பு & இயக்கத்தில் வெளியாகவுள்ள கைதியின் ஹிந்தி ரீமேக்கிற்கு போலா என பெயரிட்டுள்ள படக்குழு, நேற்று டீசர் வெளியிட்டது. அதனை பார்க்க சத்தியமாக தமிழ் கைதி பீலிங் வரவே இல்லை என்று தமிழ் ரசிகர்கள் குமுறி நொந்துபோயுள்ளனர்.

படத்தின் டீசரையும் வறுத்தெடுக்கின்றனர். இதில் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் படம் 3டி-யில் வெளியாகிறது என்பதுதான்.