சினிமா பிக்பாஸ்

மதுமிதா தற்கொலை முயற்சி.! அதிரடியாக கேள்விகேட்ட பிரபல நடிகரை, பங்கமாய் வச்சு செய்த நெட்டிசன்கள்!!

Summary:

netisans answered to sv sekar for bigboss

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி என 7  போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் கடந்த ஒரு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில் அமைதியாக சென்றுகொண்டிருந்த வேளையில் சர்ச்சைகளை கிளப்பும் வகையில் வனிதா மீண்டும் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

அதனைத்தொடர்ந்து, பல பெரும் பிரச்சினைகளுக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் எஸ்.வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து  மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா. ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பதிலடி கொடுக்குமாறு, அவரை குறைகூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


Advertisement