பிரபல திரையரங்கில் முதல் ஒரு நாளில் மட்டுமே இத்தனை ஷோவா? மாஸ் காட்டும் நேர்கொண்ட பார்வை!!

பிரபல திரையரங்கில் முதல் ஒரு நாளில் மட்டுமே இத்தனை ஷோவா? மாஸ் காட்டும் நேர்கொண்ட பார்வை!!


 nerkonda parvai released 84 show in mayajaal

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தற்போது சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்து வெளியான விசுவாசம் தமிழக மக்களையே பேசவைத்தது. இந்தநிலையில் முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் நேற்றும் உலகம்முழுவதும் வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. 

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் H.வினோத்.

nerkonda parvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் நேற்று வெளியானதை தொடர்ந்து , படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் தல ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்வகையில் முதல் நாள் சென்னையின் முக்கிய திரையரங்குக வளாகமான மாயாஜால் திரையரங்கில் உள்ள 16 ஸ்கிரீன்களிலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீனிலும் 6 காட்சிகள் என ஒரு நாளிலேயே 84  காட்சிகள் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.