சினிமா

தெறிக்கவிடும் தல ரசிகர்கள்.! சற்றுமுன் படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புதிய தகவல்!!

Summary:

nerkonda parvai release date announced

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வந்த நிலையில் இதுகுறித்து படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 


Advertisement