சினிமா

தல ரசிகர்களே, ஹெட்போன் ரெடியா? மாஸாக வருகிறது செமையான புதிய அப்டேட்!!

Summary:

nerkonda parvai new update by ponikapoor

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் என்ற முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ்மனதில் பதிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது ஹெட்போனை தயாராக வைத்திருங்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் EDM பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும்” என்று அறிவித்துள்ளார். 


 


Advertisement