காதல் என்ற வார்த்தை இருக்கும் வரையில் கணேசன் வாழ்ந்து கொண்டே இருப்பான்.! நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தை ஞாபகம் இருக்கிறதா.?

காதல் என்ற வார்த்தை இருக்கும் வரையில் கணேசன் வாழ்ந்து கொண்டே இருப்பான்.! நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தை ஞாபகம் இருக்கிறதா.?



Nenjirukkumvaraimovie17years

கடந்த 2006 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் நெஞ்சிருக்கும் வரை. நரேன், தீபா, நாசர், மகாதேவன் ஆகியோர் நடித்த இந்த திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். மேலும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் நரேன், கணேசன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார். ஆட்டோ ஓட்டும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நபர் தான் கணேசன். கதாநாயகியான புவனா, ஒரு பணக்கார வீட்டு பெண். ஆனாலும் அவருக்கு சரியான பாசம் கிடைக்காததால், உண்மையான அன்பை தேடி வருவார். அப்போதுதான் கணேசன், புவனா சந்திப்பு நிகழும். புவனா கணேசனின் நேர்மை மற்றும் நற்குணத்தால் ஈர்க்கப்படுவார்.

cinema

பின்னர் புவனா தன்னுடைய காதலை கணேசனிடம் தெரிவிக்க,  காதலை ஏற்க மறுத்து விடுகிறார் கணேசன். ஆனாலும் கணேசனை புவனாவால் பிரிய முடியாமல், தன்னுடைய வீட்டை விட்டு வந்து விடுகிறார். இதை கண்ட கணேசன் புவனாவை ஏற்றுக் கொள்கிறார். அதன் பின்னர் தான் எதிர்பாராத விதமாக புவனாவுக்கு ஒரு விபத்து நடக்கிறது.

அந்த விபத்தால், புவனா உயிருக்கு போராடும் நிலைக்கு செல்கிறார். ஆனால் மருத்துவர்கள் இதயமாற்று அறுவை சிகிச்சையை தவிர்த்து வேறு எந்த சிகிச்சையாலும் அவரை காப்பாற்ற முடியாது என்று கைவிரித்து விடுகிறார்கள். கணேசனிடம் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணமில்லை ஆனாலும் புவனாவை விட்டு நம்மால் வாழ முடியாது என்று தவித்து வருகிறார்.

அதன் பிறகு அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மொத்த பணத்தில் பாதி பணத்தை தயார் செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, மருத்துவமனை நிர்வாகம் அதனை ஏற்றுக் கொள்ளாது. பின்னர் அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஒரு பார்ட்டியில் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு சென்று கணேசன் கலாட்டா செய்து விடுகிறார்.

cinemaஅதன் பிறகு புவனாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை ஒப்புக்கொண்டாலும், புவனாவுக்கான இதயம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், கணேசன் தன்னுடைய இதயத்தை தன்னுடைய காதலிக்கு கொடுக்க நினைக்கிறார். மேலும், அவன் எடுத்த முடிவில் உறுதியாகவும் இருக்கிறான்.

அதன் பிறகு உயிருடன் இருக்கும் ஒரு நபரின் இதயத்தை எடுத்து மற்றவர்களுக்கு வைப்பது சட்டவிரோதமானது என்று மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது தான் கணேசன் தன்னுடைய உயிரை தியாகம் செய்ய முடிவு செய்து, அதன் பிறகு புவனாவிடம் பேசிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அறுவை சிகிச்சை மூலமாக கணேசனின் இதயம் புவனாவிற்கு பொருத்தப்படுகிறது. இதுதான் திரைப்படத்தின் கதை.

அதேபோல இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள , "ஒருமுறை பிறந்தேன், ஒருமுறை பிறந்தேன் என்ற பாடல் இன்று வரையில் எல்லோருடைய ப்ளே லிஸ்டிலுமிருக்கும் அந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 வருடங்கள் உருண்டோடி விட்டது.