கோடீஸ்வர நபருக்கு மூன்றாவது மனைவியான பிரபல நடிகை..! கிண்டல்களுக்கு அவர் கொடுத்த பதிலடி..!

கோடீஸ்வர நபருக்கு மூன்றாவது மனைவியான பிரபல நடிகை..! கிண்டல்களுக்கு அவர் கொடுத்த பதிலடி..!


Neha pandse marriage photos

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை நேஹா பென்ட்சே. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, இனிது இனிது காதல் இனிது என்ற படத்திலும் நடித்துள்ளார் நேஹா பென்ட்சே.

2017 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஷர்துல் பயஸ் என்ற அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து 2 திருமணமும் விவகாரத்தில் முடிந்துள்ளது.

இழியில் ஷர்துல் பயஸ்க்கு நேஹா மூன்றாவது மனைவி என்பதால், போயும் போயும் மூன்றாவது மனைவியா போய்ட்டீங்களே என பலரும் நேஹாவை கிண்டல் அடித்துவந்தனர். இந்நிலையில் இதற்கு பதில் கூறாமல் மவுனம் காத்துவந்த நேஹா தற்போது இதுகுறித்து பேசியுள்ளார்.

Actress Neha

உலகத்தில் எங்குமே இதுபோன்று நடக்கவில்லையா? நான் மட்டுமே, ஒருவருக்கு மூன்றாவது தாரமாக போனதாக சொல்கின்றனர். இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்ணோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது. திருமணத்துக்கு முன்பே கூட, பலரும் சில பேருடன்  தொடர்பில்தான் இருக்கின்றனர். என நேஹா காட்டமாக கூறியுள்ளார்.