கேரளத்து பெண்ணுக்கு ரூட் விட்ட தமிழகத்து இளைஞன்.. கொரோனாவால் பத்திரிகையோடு வந்த பெண்குட்டி... சம்பவமோ சம்பவம்.!

கேரளத்து பெண்ணுக்கு ரூட் விட்ட தமிழகத்து இளைஞன்.. கொரோனாவால் பத்திரிகையோடு வந்த பெண்குட்டி... சம்பவமோ சம்பவம்.!


Neeya Nana Promo

விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருப்பது நீயா நானா. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த நிகழ்ச்சி அனைவராலும் கவரப்பட்டு காணப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவராக கோபிநாத் இருந்து வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு இருபுறமும் பேசி இறுதியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

இந்த வார தலைப்பில் காதலில் எனக்கு ராசி இல்லை ஆண்கள் VS பெண்கள் என்ற தலைப்பில் பேசப்படுகிறது. இதுகுறித்த ப்ரோமோ வெளியாகிய நிலையில், அந்த ப்ரோமோவில் பேசிய ஆண் "நாங்கள் 5 பேர் நண்பராக இருக்கிறோம். என்னுடன் தான் எனது நண்பர்கள் இருப்பார்கள். 

திருமணத்திற்கு ஏதாவது போகும்போதும் ஒன்றாக தான் செல்வோம். ஆனால் என்னுடன் இருப்பவர்கள் அருகிலிருக்கும் பெண்களிடம் மொபைல் நம்பரை வாங்கி விடுவார்கள். அது எப்படி என்று தெரியவில்லை?. நானும் அருகில் தான் இருப்பேன். ஆனால் எனக்கே தெரியாமல் எப்பொழுது தான் நம்பர் வாங்குவார்கள் என்று தெரியாது" என்று கூறினார். 

மற்றொருவர் "ஐடி வேலையில் சேர்ந்தால் காதல் செட்டாகும் என்ற மனநிலையில் தான் சேர்ந்தேன். அதுவும் தமிழ்நாட்டில் சேர்வதைவிட்டு கேரளாவில் சென்று சேர்ந்தேன். அங்கு எனக்கு ஒரு நெருங்கிய தோழியும் உண்டானார். நானும், அவரும் எங்களது தாய்மொழிகளை மாறி மாறி சொல்லிக் கொடுத்துக்கொண்ட நிலையில், மார்ச் 2020 கொரோனா என்ற ஆப்புவந்தது. 

கொரோனா காலகட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிந்திருந்த நிலையில், கடந்த வாரம்தான் எனது தோழி அவருடைய திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார். இது மிகவும் அதிர்ச்சியாளிப்பதாக தெரிவித்திருந்தார்". இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் ரொம்ப பாவம்யா.. கொரோனா என்னெல்லாம் பண்ணுது பாருங்களேன் என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.