சினிமா

சீரியல்நடிகை நீலிமா ராணியா இது.! சினிமா ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே!! கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

Summary:

neelima rani latest photoshoot

தமிழ் சினிமாவில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை  தொடர்ந்து அவர்  பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், மொழி, திமிரு, நான் மகான், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட மேலும் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் அவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் வில்லியாகவும் நடித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கும் நிலையில், அவர் மிகவும் எதார்த்தமாக நடித்து வருகிறார்.

Image result for நீலிமா ராணி

நீலிமா ராணிக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் அவர் தனது குடும்பத்தினரின் முழுஆதரவோடு தொடர்ந்து அவர் சீரியல், சினிமா, ஆங்கரிங் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் தொடர்களில் மட்டுமின்றி அனைத்து நிகழ்ச்சிகளிலும் வித்தியாசமான உடையணிந்து அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கிறார்.

இந்தநிலையில் அவர் தற்போது சமீபத்தில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அழகிய உடையணிந்து சினிமா ஹீரோயின்களையே மிஞ்சியவாறு அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் பெரும் ஆச்சரியம் அடைத்துள்ளனர்.

 


Advertisement