வாவ்.. தன் திருமண நாளில், அசத்தலான, ரொம்ப மகிழ்ச்சியான செய்தியை கூறிய நடிகை நீலிமா! என்னனு பார்த்தீங்களா!!

வாவ்.. தன் திருமண நாளில், அசத்தலான, ரொம்ப மகிழ்ச்சியான செய்தியை கூறிய நடிகை நீலிமா! என்னனு பார்த்தீங்களா!!


neelima rani got pregnant again

சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. மேலும் சினிமாவில் நடித்தவர்களை விட, சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்கள் ஏராளம். அதுபோன்று ஏராளமான சீரியலில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர்  பின்னர் தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல,  பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார்.

எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகை நீலிமாவிற்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அண்மையில் திருமண நாளை கொண்டாடிய அவர் மேலும் சந்தோசமான செய்தி ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது அவர், ஜனவரியில் நாங்கள் நான்கு நபர்களாக ஆக போகிறோம். இன்னும் 20 வாரங்கள் தான் உள்ளது என மிகவும் மகிழ்ச்சியாக தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.