பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
"நீ இல்லாமல் நான் இல்லை" - துல்கர் சல்மானின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து..!
பிரபல நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மோலிவுட் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர் துல்கர் சல்மான். இவர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த "ஓ காதல் கண்மணி" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த படத்திற்கு முன்னதாக இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்று தருகின்றன.
இவரது நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாராட்டையும் பெற்றது. இறுதியாக தமிழில் வெளியான "ஹே சினாமிகா" படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்று நடிகர் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் என்பதால் திரைத்துறையில் உள்ள பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது ரசிகர்களின் கனவுகன்னி நஸ்ரியாவும் துல்கர் சல்மானுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பம். லவ் யூ சோ மச். நீ இல்லாமல் நான் இல்லை. நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?. நீ இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று தனது வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.