எல்லாம் வதந்தி! அஜித்தின் வலிமை படம் குறித்த விமர்சனத்திற்கு நஸ்ரியா விளக்கம்

Nazriya tweets about ajiths valimai


Nazriya tweets about ajiths valimai

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு அடுத்து தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'வலிமை' என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நிறைவேறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார். அதிரடி ஆக்சன் நிறைந்த இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 


இந்நிலையில் கடந்த வாரம் நடிகை நஸ்ரியா ஒரு புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு #valimai என்ற ஹேஸ் டேக்கை குறிப்பிட்டிருந்தார். இதனால் இவரும் அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவியது.

ஆனால் 'அது உண்மையல்ல, எல்லாம் வதந்தி, பொய்யான செய்திகளை பறப்பாதீர்கள்' என நஸ்ரியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நஸ்ரியா அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கவில்லை என தெரிகிறது.