அடக்கடவுளே பகத் பாஸிலுக்கு இப்படி ஒரு நிலைமையா.. பயந்து போன நஸ்ரியா.!Nazriya latest interview about her husband

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவரது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.

Nazriya

மேலும் நஸ்ரியா தமிழில் முதன் முதலில் 'நேரம்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு பின்பு ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, பெங்களூர் நாட்கள், வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் இவரது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.


2014 ஆம் ஆண்டு மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார் நடிகை நஸ்ரியா. தற்போது இவரது கணவர் பகத் பாசிலை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

Nazriya

அவர் கூறியதாவது, "திடீரென்று வீட்டில் பாத்ரூமில் பகத் பாஸில் கத்தும் சத்தம் கேட்டது. நான் பயந்து போய் என்ன ஆச்சு என்று விசாரிக்கும் போது அவர் நடிக்கும் படத்தில் உள்ள கேரக்டராகவே மாறிவிடுவாராம். அவர் எந்த கேரக்டரில் நடிக்கிறாரோ அந்த கேரக்டரில் தான் வீட்டில் இருப்பார் என்று பகத் பாசில் கூறியிருக்கிறார். நஸ்ரியா பயந்து போய் நடிப்பதை பற்றி யோசிப்பதை வீட்டு வாசலிலேயே விட்டு விட்டு வர வேண்டும் இப்படி தொடர்ந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று விடுவேன் என்று கூறியிருக்கிறார்.