அட.. நஸ்ரியாதானா இது! இவரும் கிளாமர் குயினா மாறிட்டாரே!! வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

அட.. நஸ்ரியாதானா இது! இவரும் கிளாமர் குயினா மாறிட்டாரே!! வைரலாகும் ஷாக் புகைப்படம்!!



Nazriya glamour photos viral

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த நேரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜாராணி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது  நடிப்பு இளைஞர்கள் மனதை பெருமளவில் கொள்ளை கொண்டது. 

தொடர்ந்து நஸ்ரியா நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு மற்றும் கியூட்டான சிரிப்பிற்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் இவர் ஹோம்லியான கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார்.

நஸ்ரியா மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 
மலையாள முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து,திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் பெருமளவில்  நடிக்காத அவர் தற்போது நான் ஈ பட நடிகர் நானியுடன் அடடே சுந்தரா! என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

அப்படம் ஜூன் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நஸ்ரியாவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக நஸ்ரியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் முன்பு ஹோம்லியாக காணப்பட்ட அவர் தற்போது மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் நஸ்ரியாவா இது! இப்படியெல்லாம் பார்த்ததே இல்லையே! என வாயடைத்துப் போயுள்ளனர்.