சினிமா

விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகை நஸ்ரியா! விமர்சனம் செய்தவர்களுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

Summary:

2 கோடி மதிப்புள்ள காரை வாங்கிய நஸ்ரியா மற்றும் பகத் பாசிலை விமர்சனம் செய்த நெட்டிசன்களுக்கு நடிகை அஹானா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழில் நேரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட சில படங்களிலேயே நடித்தாலும், அவரது சிறந்த நடிப்பால் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் நஸ்ரியா மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில்  இருவரும் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து காதலித்து  2014-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நஸ்ரியாவும், பகத் பாசிலும் கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள போர்ஷே 911 என்ற மாடல் சொகுசு காரை வாங்கினர். 

அந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அதற்கு பலரும் வாழ்த்து கூறினர். ஆனால் சிலரோ  கொரோனாவினால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் 2 கோடி ரூபாயில் உங்களுக்கு இந்த கார் தேவையா? அதை வைத்து கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவலாமே என விமர்சனம் செய்தனர். 

இந்நிலையில் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் நடிகை அஹானா கிருஷ்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில், மக்கள் தங்கள் பொறாமையை அடக்க முடியவில்லையென்றால், அது இப்படித்தான் விஷம் போல வெளியே வந்து விழும். அடுத்தவர் வாழ்க்கையில் ஒரு நன்மை நடக்கும்போது பொறாமைபடுகின்றனர்.  அடுத்தவரகளுக்காக சந்தோஷப்பட முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழலில்  உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 


Advertisement