ஆத்தி., இவ்வளவு ரொமென்ஸா.. சினிமாவை விட நிஜத்தில் அன்பை அள்ளிக்கொட்டும் நயன்தாரா..!

ஆத்தி., இவ்வளவு ரொமென்ஸா.. சினிமாவை விட நிஜத்தில் அன்பை அள்ளிக்கொட்டும் நயன்தாரா..!


naynthara viknesh shivan photoshoot

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்ட ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்காக ஒட்டுமொத்த ஹோட்டலையே ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்த நிலையில், திருமணத்தில் திரையுலகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஆனால் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் செல்போன், கேமராவில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர். இதற்கு காரணம் அவர்களது திருமண நிகழ்வுகளை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தான் என்று கூறப்படுகிறது. இதனை மீறி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டனர்.

இதனால் ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியதாகவும், 25 கோடி ரூபாய் பணத்தை திரும்பி தர வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவை ஏதும் உண்மை கிடையாது, வதந்தி என நெட்பிளிக்ஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடற்கரையில் எளிமையாக ரொமான்டிக் போட்டோ சூட் ஒன்றினை நடத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை புகைப்பட நிறுவனம் வெளியிடவே, ரசிகர்கள் சினிமாவில் கூட இந்த அளவு தத்ரூபமாக நயன்தாரா ரொமான்ஸ் பண்ணது கிடையாது என்று கூறிவருகின்றனர்.