என்னது! அந்தமாதிரியான கதாபாத்திரமா?? தேசிய விருதுபெற்ற பட ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா! தீயாய் பரவும் தகவல்!

என்னது! அந்தமாதிரியான கதாபாத்திரமா?? தேசிய விருதுபெற்ற பட ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா! தீயாய் பரவும் தகவல்!



nayathara-rejected-to-act-in-remake-of-andhadum-movie

ஹிந்தியில் அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன். காமெடி கலந்த கிரைம் த்ரில்லர் படமான இதனை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை நடிகர் நிதின் தயாரித்து ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் மிகவும் முக்கியான கதாபாத்திரமான  தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், மேலும் அந்த படத்தில் நடிக்க அவர் ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. 

nayanthara

இந்நிலையில் அப்படத்தில் திருமணத்தை மீறிய  உறவில் ஈடுபடுவது போன்ற சர்ச்சையான கதாபாத்திரம் என்பதால் அதில் நடிக்க நடிகை நயன்தாரா மறுத்துவிட்டதாகவும், மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் தற்போது வேறு நடிகைகளை தேடி வருவதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.  மேலும் நயன்தாரா தற்போது தன் கைவசம் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை  கொண்டுள்ளார்.