சாப்பிடும் போதும் ரொமான்ஸா?? நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ! வயிறெரியும் சிங்கிள்ஸ்!!

சாப்பிடும் போதும் ரொமான்ஸா?? நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ! வயிறெரியும் சிங்கிள்ஸ்!!


nayanthara-with-vignesh-shivan-eating-video-viral

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.

மேலும் சுற்றுலா செல்வது, கோவில்களுக்குச் செல்வது என ஒன்றாக உலா வருகின்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் திருப்பதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் அவ்வப்போது நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நயன்தாராவுக்கு பிடித்த உணவை ஊட்டி விடுகிறார். அதனைக் கண்ட சிங்கிள்ஸ் வயிற்றெரிச்சல் அடைந்துள்ளனர்.