வெளிநாட்டில் நடுவீதியில், மெய்மறந்து நின்று ரசித்த நடிகை நயன்தாரா! யாரைனு பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!

வெளிநாட்டில் நடுவீதியில், மெய்மறந்து நின்று ரசித்த நடிகை நயன்தாரா! யாரைனு பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!


nayanthara-watching-drums-player-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி தரிசனம், தாய்லாந்தில் ஹனிமூன் என பிஸியாக இருந்தனர். தொடர்ந்து நயன்தாரா பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி ஜவான் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் அவர் ஸ்பெயின் நாட்டிற்கு செகண்ட் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு விக்கி மற்றும் நயன் ஜோடியாக வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், நயன்தாரா அங்கு நடு வீதியில் நின்று ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த நபரின் திறமையை மெய்மறந்து ரசித்து பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.