அடேங்கப்பா... வீட்டின் பாத்ரூக்கே இப்படி ஒரு டிசைனா... கோடிக்கணக்கில் கட்டப்படும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் புதிய வீடு...

அடேங்கப்பா... வீட்டின் பாத்ரூக்கே இப்படி ஒரு டிசைனா... கோடிக்கணக்கில் கட்டப்படும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் புதிய வீடு...



Nayanthara vinesh Sivan costly new home design

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

இதனையடுத்து இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து அழகிய ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் சுற்றுபயணத்தை முடித்த அவர்கள் இருவரும் சமீபத்தில் சென்னை திரும்பி, அவரவர் வேலையில் பிஸியாகியுள்ளனர்.

Nayan Vignesh Sivan

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த வீட்டின் இன்டிரியர் டிசைன் வேலைக்கு மும்பையை சேர்ந்த குழுவை வரவளைத்துள்ளார்களாம். அதுமட்டுமின்றி அவர்கள் வீட்டின் பாத்ரூம் நீர்வீழ்ச்சி அம்சங்களுடன் சுமார் 1500 sq ft-ல் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் வீட்டின் இன்டிரியர் டிசைனின் மதிப்பு மட்டும் 25 கோடி ஆகியுள்ளதாம்.