பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையை சந்தித்துள்ள நயன்-விக்கி ஜோடி! யாருனு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையை சந்திதுள்ள நயன்-விக்கி ஜோடி! யாருனு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!


nayanthara-vignesh-shivan-meet-malaikka-arora

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நயன் மற்றும் விக்கி ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.  அதனைத் தொடர்ந்து  திருமணம் முடிந்த கையோடு அவர்கள் திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டனர், தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

nayanthara

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவை நேரில் சந்தித்துள்ளனர். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து நடிகை மலைக்கா, "வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார். மலைக்கா அரோரா உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தைய்ய தைய்யா பாடலின் மூலம் பிரபலமானவர்.