அடேங்கப்பா! எம்புட்டு பெரிய டாட்டூ! படுத்தவாறு தனது முதுகில் பச்சை குத்திக் கொள்ளும் நடிகை நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

அடேங்கப்பா! எம்புட்டு பெரிய டாட்டூ! படுத்தவாறு தனது முதுகில் பச்சை குத்திக் கொள்ளும் நடிகை நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!


Nayanthara tatoo on her back

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். 

மேலும் இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் சமீபத்தில் ஆர். ஜே பாலாஜியுடன் இணைந்து அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

nayanthara

 இந்நிலையில் நயன்தாரா தனது முதுகில் பச்சை குத்திக் கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இத்தகைய பெரிய டாட்டூ நிரந்தரமானதா? அல்லது   ஏதேனும் படத்திற்காக  தற்காலிகமாக போடப்பட்டதா? என தெரியவில்லை. இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.