பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
படவாய்ப்பு இல்லாததால் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. இனி நயன்தாராவை பார்க்க முடியாதா.? ரசிகர்கள் வருத்தம்.!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர்களின் திருமணத்திற்கு பின்பு விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த அஜித் படம் கைநழுவி போனது.
நயன்தாராவுக்கும் தற்போது படவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் தமிழில் இந்திக்கு சென்ற நயன்தாரா தற்போது 'ஜவான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இதற்கு தமிழ்சினிமாவின் படவாய்ப்பை நம்பி இருக்காமல் நயன்தாரா அடுத்தகட்ட வேலைக்கான முடிவை எடுத்துவிட்டார்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். இதன்மூலம் தற்போது 'சுபயாத்ரா' என்ற குஜராத் மொழி திரைப்படத்தை தேசியவிருது பெற்ற இயக்குநரை வைத்து இயக்கி வருகின்றனர்.
மேலும் திரைத்துறையில் மார்க்கெட் இருக்கும்போதே பல தொழில்களை ஆரம்பித்து அதன்மூலம் வருமானம் பெற்று வருகின்றனர். பிறமொழி படங்களை இவர்களின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து மேலும் வருமானம் பெறலாம் என்று நயன்தாரா முடிவு எடுத்துள்ளார்.