சினிமா

இதுவரை வாங்கிய சம்பளத்தை விட இந்த படத்திற்கு மட்டும் இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா நடிகை நயன்தாரா! எந்த படம் தெரியுமா?

Summary:

Nayanthara next movie income 8 cr

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

நடிகை நயன்தாரா விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் தான் தனது காதலனான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தனது 35 வது பிறந்தநாளை கோலாகலமாக வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் நயன்தாரா இதுவரை அனைத்து படங்களுக்கும் 5 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இந்த படத்திற்கு மட்டும் 8 கோடி சம்பளமாக பெறுகிறாராம். 


Advertisement