சினிமா

மாபெரும் வெற்றிபெற்ற படத்தை தவறவிட்ட நயன்தாரா..! அவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.? எந்த படம் தெரியுமா..?

Summary:

Nayanthara missed a chance to female lead role in paiyaa movie

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது பையா திரைப்படம். வேலை வெட்டி ஏதும் இல்லாத இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு மும்பை வரை செல்வதும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது பையா திரைப்படம்.

படத்தின் கதை, பாடால்கள் என அனைத்தும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று செம ஹிட் அடித்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்நிலையில், படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளநிலையில், இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

அதவது, படத்தில் நாயகியாக தமன்னா நடித்திருந்தார். இந்த படம் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். ஆனால், இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது நயன்தராதனம். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் நடிப்பை பார்த்த இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளார்.

எல்லாம் நன்றாக சென்ற நேரத்தில், சம்பளம் தொடர்பாக பிரச்சனை வரவே நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலக அதன்பிறகே தம்மன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.


Advertisement