புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம்!" நயன்தாரா நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவின் "லேடி சூப்பர்ஸ்டார்" என்ற அந்தஸ்தில் இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இவரது தாய் மொழியான மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக "ஐயா" படத்தில் அறிமுகமான இவர், இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக "சந்திரமுகி" படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதில் அவர், "20 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் இங்கு நிற்க நீங்கள் தான் காரணம். என் உந்துசக்தியாக நீங்கள் இருந்தீர்கள்.
நீங்கள் இல்லாமல் என் பயணம் முழுமையடையாது. நான் இந்த மைல்கல்லை கொண்டாடும்போது, சினிமாவில் எனக்கு உருவான ஆதரவான, நம்பமுடியாத ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். எப்பொழுதும் உங்கள் உண்மை நயன்தாரா" என்று ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.