சென்னை வெள்ளத்தால் மரண அடி வாங்கிய நயன்தாராவின் அன்னபூரணி வசூல்.!

சென்னை வெள்ளத்தால் மரண அடி வாங்கிய நயன்தாராவின் அன்னபூரணி வசூல்.!


Nayanthara in annaboorani collection low

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி முக்கியம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கனெக்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

nayanthara

இந்த நிலையில் நயன்தாரா நடித்துள்ள தனது 75வது திரைப்படமான அன்னபூரணி கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று முதல் நாளில் 60 லட்சம் ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

nayanthara

இதனால் இந்த படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அன்னபூரணி படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது படுக்குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.