சினிமா

அடேங்கப்பா.. லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா! நயன்- விக்கி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிப்ட்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Summary:

அடேங்கப்பா.. லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா! நயன்- விக்கி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிப்ட்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

20 புரோகிதர்கள் மந்திரம் கூறி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு தாலி கட்டியுள்ளார். பின்னர் 27 வகை உணவுகள் விருந்தாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களது திருமண உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

பின்னர் மதியத்திற்கு மேல் விக்னேஷ் சிவனே தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தமிழக முறைப்படி திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய். பழம் அடங்கிய தாம்பூல பை வழங்குவது வழக்கம். ஆனால் நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்  பொருட்கள் கிப்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 


Advertisement