சினிமா

நயன்தாரா எடுத்த புதிய முயற்சி, பட்டையை கிளப்பும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், செம குஷியான ரசிகர்கள்.!

Summary:

nayanthara firstlook poster released

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக ஐரா என்ற படத்தில் வித்தியாசமான முறையில்  நடிக்க உள்ளார்.
 
இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக கலையரசன் நடிக்கிறார். இந்த படத்தை `லட்சுமி’, `மா’ போன்ற குறும்படங்களை இயக்கி பிரபலமான  சர்ஜுன்.கே.எம் இயக்கவிருக்கிறார். மேலும் இதை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார். 

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

nayanthara airaa first look poster க்கான பட முடிவு

ஹாரர் மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்திற்காக சென்னையில் பேய் பங்களா செட் ஒன்றை அமைத்து படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Advertisement