தன் இரட்டை குழந்தைகளுடன் செம ஹேப்பியாக கொண்டாட்டத்தில் நயன்-விக்கி.! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்!!

தன் இரட்டை குழந்தைகளுடன் செம ஹேப்பியாக கொண்டாட்டத்தில் நயன்-விக்கி.! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்!!


Nayanthara christmas celebrating photos viral

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் திருமணமான 4 மாதத்திலேயே இருவரும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாவதாக அறிவித்தனர். வாடகைதாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுகொண்டது தெரியவந்தது. மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் தாத்தா போல உடையணிந்துள்ளனர். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.