அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அன்னபூரணி படத்திற்காக தனது கொள்கையை மாற்றிக் கொண்ட நயன்தாரா.. என்ன செய்தார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றுள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல பிசினஸ்களையும் செய்து வருகிறார். சமீபத்தில் femi 9 என்ற நாப்கின் பிராடக்டுகளை விற்கும் பிசினஸ் தொடங்கியிருக்கிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் ஜெய் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

இதனை அடுத்து இப்படத்திற்காக தொடர்ந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர் ஜெய் மற்றும் நயன்தாரா. நயன்தாரா இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை திரைத்துறையினர் அதிர்ச்சியாக பார்த்து வருகின்றனர். மேலும் அன்னபூரணி படத்திற்காக தன் கொள்கையை மாற்றிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.