காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்

காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்


nayanthara celebrates christmas with vignesh sivan photos

சொந்த வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. நடிகை நயன்தாராவுடன் இப்பொது மிக நெருக்கமாக இருந்து வருபவர் இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள விக்னேஷ் சிவன்.   

ஹீரோ யாராக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மேலும் இவர் ஐரா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara

இப்படி நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் இவருடைய காதலர் விக்னேஷ் சிவன் தான் என்று அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இவரது இயக்கத்தில் வெளியான 'நானும் ரௌடி' தான் படத்திலிருந்தே நயன்தாராவின் நடிப்பில் மற்றும் சொந்த வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன.

nayanthara

இவர்கள் இப்போது எந்த விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி செய்துவருகின்றனர். இருவரும் எங்கு சென்றலும் புகைப்படங்களை உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வகையில் இன்று அவர்கள் கிறிஸ்தமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில் நயன்தாரா தானாகவே வீட்டில் அலங்கார வேலைகளை செய்து வருகிறார்.