சினிமா

என்னது... கேப்டன் தோனியின் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

என்னது... கேப்டன் தோனியின் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டான மகேந்திர சிங் தோனி தற்போது இந்திய அணியிலிருந்து ஒய்வு பெற்றதை அடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 

இவர் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு மோசமான தோல்விகளை பெற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் ஓய்வுக்கு பின் தோனி திரைப்பட தயாரிப்பாளராக இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தோனி தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


Advertisement